ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 6 மே 2024 (14:26 IST)

சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனுதாக்கல்.. நீதிமன்றம் அனுமதிக்குமா?

savukku shankar
யூ டியூபர் சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, கோவை நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீசார் மனுதாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார் என்பதும், சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் கோவை நீதிமன்றத்தில் இன்று சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 17ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் சவுக்கு சங்கரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சைபர் கிரைம் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
 
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் காவலில் எடுக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran