விக்ரம் சூர்யா இரண்டு பேரையும் வேண்டாம் என சொன்ன இயக்குனர்… இப்ப என்ன செய்றார் தெரியுமா?
இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான மணிகண்டன் ஆண்டவன் கட்டளை படத்துக்குப் பின்னர் விக்ரம் மற்றும் சூர்யாவின் படங்களை வேண்டாம் என தட்டிக்கழித்துள்ளார்.
இயக்குனர் மணிகண்டன் இயக்கிய காக்கா முட்ட, குற்றமே தண்டனை மற்றும் ஆண்டவன் கட்டளை ஆகிய படங்கள் அவருக்கு நல்ல இயக்குனர் என்ற பெயரை வாங்கிக் கொடுத்தன. கடைசியாக வெளியான ஆண்டவன் கட்டளை திரைப்படம் மிகப்பெரிய அளவில் பாராட்டுகளையும் வெற்றியையும் பெற்ற நிலையில் விக்ரம் மற்றும் சுர்யா ஆகியோரிடம் இருந்து மணிகண்டனுக்கு அழைப்பு வந்துள்ளது.
ஆனால் அப்போது கடைசி விவசாயி பட வேலைகளில் அவர் இருந்ததால் இருவரையும் நிராகரித்துள்ளார். ஆனால் கடைசி விவசாயி திரைப்படம் நீண்ட நாட்களாக ரிலீஸாகாமல் பெட்டியில் இப்போது தூங்கிக் கொண்டு இருக்கிறது.