1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 27 மே 2021 (16:13 IST)

பொறுத்தது போதும்… ஓடிடிக்கு செல்லும் கடைசி விவசாயி!

மணிகண்டன் இயக்கியுள்ள கடைசி விவசாயி திரைப்படம் ஓடிடி ரிலிஸுக்கு தயாராகி உள்ளதாக சொல்லப்படுகிறது.

காக்கா முட்டை, குற்றமே தண்டனை மற்றும் ஆண்டவன் கட்டளை ஆகியப் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் மணிகண்டன் தனது நான்காவதாகப் படமாகக் கடைசி விவசாயி எனும் படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்தப்படத்தில் 70 வயது விவசாயி ஒருவர் கதாநாயகனாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் முழுவதுமாக தயாராகி விட்டாலும் சில ஆண்டுகளாக ரிலீஸாகாமல் கிடப்பில் இருக்கிறது. இந்நிலையில் கொரோனா லாக்டவுனும் சேர்ந்துகொண்டதால் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய இயக்குனரும் தயாரிப்பாளருமான மணிகண்டன் முடிவு செய்துள்ளாராம். அதற்கான பேச்சுவார்த்தைகள் இப்போது நடந்து வருகின்றன.