வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 5 மார்ச் 2020 (11:40 IST)

படிக்க வசதியில்லை.. தற்கொலைக்கு முயன்ற மாணவன்! – காப்பாற்றி உதவி செய்த இன்ஸ்பெக்டர்!

சென்னையில் குடும்ப வறுமை காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற மாணவனை இன்ஸ்பெக்டர் காப்பாற்றி உதவி செய்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் சரவணன். சென்னையில் நெற்குன்றத்தில் தங்கி லயோலா கல்லூரியில் படித்து வருகிறார். சமீப காலமாக குடும்பத்தில் உள்ள வறுமையின் காரணமாக கல்லூரி கட்டணங்களை கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார் சரவணன். தேர்வு கட்டணம் கட்ட முடியாததால் விரக்தியில் இருந்த சரவணன் தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது.

இதுகுறித்து அவரது நண்பர்கள் போலீஸுக்கு தகவல் சொல்ல, விரைந்து வந்த அவர்கள் சரவணனை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பிறகு சில நாட்களில் குணமாகி திரும்பிய சரவணனை அழைத்த காவல் ஆய்வாளர் மாதேவரன் 4 ஆயிரம் ரூபாய் தேர்வு கட்டணத்திற்காக வழங்கி அந்த மாணவனுக்கு உதவி செய்துள்ளார்.

காவல் ஆய்வாளரின் இந்த உதவி குறித்து அறிந்த மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அவரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். காவல் ஆய்வாளரின் இந்த உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.