இவ்வளவு பட்டும் திருந்தல.. முகக்கவசம் இல்லை; 20 நாட்களில் 11 லட்சம் வழக்கு!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் முகக்கவசம் அணியாமல் பலர் பொதுவெளியில் நடமாடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கு முகக்கவசம் அணிய சொல்லி அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இப்படியான இக்கட்டான சூழலிலும் முகக்கவசம் அணியாமல் செல்பவர்கள் இருந்து கொண்டே இருக்கிறார்கள். தமிழகத்தில் கடந்த 8ம் தேதி முதல் இதுவரையிலான 20 நாட்களில் முகக்கவசம் அணியாமல் வெளியே திரிந்ததாக 11,57,201 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல தனிமனித இடைவெளியை கடைபிடிக்காததால் 54,771 வழக்குகள் பதிவாகியுள்ளன. கொரோனா இவ்வளவு தீவிரமாக உள்ள நிலையிலும் மக்கள் விழிப்புணர்வின்றி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.