செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 28 மே 2021 (13:22 IST)

முன்கள பணியாளர்கள் குடும்பனருக்கு அரசு வேலை? – அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரை!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழக்கும் மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது குறித்து நீதிமன்றம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு பணிகளில் அதிகமான மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு உயிரிழக்கும் மருத்துவர்களின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்கி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து பரிந்துரை ஒன்றை தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் வைத்துள்ளது. கொரோனா தடுப்பில் ஈடுபட்டு உயிரிழக்கும் முன்கள பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்களின் குடும்பங்களில் தகுதியான நபர் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது குறித்து பரிந்துரை செய்துள்ளது.