திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 28 மே 2021 (12:26 IST)

5 வருஷமா குடும்பம் நடத்திட்டு.. ஏமாத்த பார்க்கிறார்! – முன்னாள் அமைச்சர் மீது நடிகை குற்றச்சாட்டு!

தன்னோடு கடந்த சில ஆண்டுகளாக வாழ்ந்து விட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றுவதாக முன்னாள் அமைச்சர் மீது நடிகை புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் சசிக்குமார் நடித்து வெளியான நாடோடிகள் படத்தில் வரும் பணக்காரவீட்டு காதலர்கள் கதாப்பாத்திரத்தில் நடித்தவர் துணை நடிகை சாந்தினி. தொடர்ந்து சில படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார்.

இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலத்திற்கு சென்று அளித்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சரான மணிகண்டன் தன்னுடன் கடந்த 5 ஆண்டுகளாக திருமணம் செய்யாமலே வாழ்ந்து வருவதாக அந்த புகாரில் கூறியுள்ள அவர், திருமணம் குறித்து பேசினால் தன்னை மிரட்டுவதாகவும், தனது ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகவும் மணிகண்டன் மிரட்டுவதாகவும் குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.