செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 4 மே 2020 (12:15 IST)

மார்ச் 24-ல் இருந்து இன்று வரை ஊரடங்கு மீறல் வசூல் எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக ரூபாய் 4,01,92,619 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது  என காவல்துறை தகவல். 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து எதற்காகவும் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.  
 
மக்கள் தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றுவோர் மீது வழக்கு பதிவு செய்தல், கைது செய்தல், வாகனங்களை பறிமுதல் செய்தல் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
 
தமிழகம் முழுவதும் 3,85,436 நபர்கள் மீது வழக்கு பதிவுகள் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறியதற்காக 4,07,895 நபர்கள் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், 3,41,971 இருசக்கரம் மற்றும் வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, ரூபாய் 4,01,92,619 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.