1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 25 மே 2018 (13:21 IST)

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ஹோட்டல் பில் 5 கோடி

கர்நாடக காங்கிரஸ் - மஜத எம்.எல்.ஏக்களின் ஹோட்டல் பில் 5 கோடியைத் தாண்டியுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக தேர்தலில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், முதல்வராக பதவியேற்றுக் கொண்ட எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பதவி விலகினார். 117 எம்.எல்.ஏ க்களை தங்கள் வசம் வைத்துள்ளது காங்கிரஸ் - மஜத கட்சி.
 
இந்நிலையில் கர்நாடக முதலமைச்சராக குமாரசாமி நேற்று முன்தினம் பதவியேற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து இன்று கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
 
குதிரை பேரத்தை தடுக்க காங்கிரஸ் - மஜத கட்சி எம்.எல்.ஏக்கள் கடந்த 8 நாட்களாக பெங்களூர், ஐதராபாத் ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில் ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களின் சாப்பாடு, விடுதி அறை வாடகை மற்றும் இதர செலவுகள் என இதுவரை 5 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.