செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (18:53 IST)

போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு.! விழித்துக் கொள்வாரா ஸ்டாலின்.? அண்ணாமலை..!!

Annamalai
திமுக ஆட்சியில் தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை   குற்றம் சாட்டி உள்ளார்.
 
மதுரையில் பைக் ஓட்டி ஒருவரை கஞ்சா போதையில் வந்த நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து அண்ணாமலை பதிவிட்டுள்ளார். அதில், திமுக ஆட்சியில் தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
 
முன்னெப்போதும் இல்லாத அளவு போதைப்பொருள் எளிதாக கிடைக்கிறது என்றும் கஞ்சா விற்கும் வியாபாரிகளுக்கு திமுகவில் பதவிகள் வழங்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது சட்டம் ஒழுங்கை கேலிக்கூத்தாக்குகிறது என்று அவர் கூறியுள்ளார்.

 
கஞ்சா போதையில் மதுரையில் அப்பாவி பைக் ஓட்டி ஒருவர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களில் தமிழகத்தில் நடந்த 4-வது சம்பவம் இது என்றும் முதல்வர் ஸ்டாலின் எப்போது விழித்துக்கொள்வார்? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.