வீரமணி விவகாரத்தில் திமுக ஏன் பதறுகிறது?.. காப்பாற்றிய பவர் செண்டர் யார்?.. நிர்மல்குமார் கேள்வி..
கடந்த வருடம் தொழிலதிபர் ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக விபச்சார தடுப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வீரமணி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பல சிறுமிகளை ஜெம் கிராணைட்ஸ் வீரமணி சீரழித்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால், வீரம்ணி மீது எந்த நடவடிக்கையும் திமுக அரசு எடுக்கவில்லை. ஒருபக்கம், தன்னை கைது செய்யாமல் இருக்க போலீஸ் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் வீர்மணி 70 கோடி வரை லஞ்சம் கொடுத்ததாக சொல்லப்பட்டது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் முதலமைச்சர் விஜய் இந்த வழக்கை மீண்டும் விசாரித்து தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
எனவே, இந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்திருக்கிறது. வீரமணிக்கும், அவருக்கு நெருக்கமான இரண்டு பேருக்கும் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்... இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி ‘போலீசாருக்கு ஆதாரமாக கிடைத்த வீடியோவில் வீரமணியின் முகம் தெளிவாக தெரியவில்லை. வழக்கை கைவிடுவதாக சொல்லவில்லை.. ஆதாரங்களுக்காக காத்திருந்தோம்.. ஜெம் வீரமணிக்கும் திமுகக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என அவர் கூறியிருக்கிறார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார் ‘திமுகவின் பவர் சென்டரில் மூன்று பேரில் ஒருவர் தலையீட்டில்தான் வீரமணி தப்பியிருக்கிறார்.. வீரமணிக்கு உதவிய நபர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தப்ப முடியாது.. வீடியோ சரியாக இல்லை என திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு சொன்னது யார்? ஜெம் வீரமணி வழக்கில் திமுக ஓவர் ரியாக்ட் செய்து வருகிறது.. திமுக சார்பில் இதுவரை ஏழு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றுள்ளது. திமுக ஏன் பதறுகிறது? இதை வைத்தே புரிந்து கொள்ளலாம்.. அந்த தவறு நடந்திருக்கிறது.. ஜெம் வீரமணி வழக்கை முடித்துக் கொள்வதாக திமுக ஆட்சியில் நீதிமன்றத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.. கேடு கெட்ட திமுக ஆட்சியில் மட்டுமே இப்படி நடக்கும். வேறு எந்த கட்சியாக இருந்திருந்தாலும் நடவடிக்கை எடுத்திருப்பார்கள்.
திமுக ஆட்சியில் வீரமணி யாரை அணுகி தப்பியிருக்கிறார்? திமுக ஆட்சியில் முதல்வர் அலுவலகத்தை அணுகும் அளவிற்கு வீரமணி செல்வாக்கு உள்ளவராக இருந்திருக்கிறார். திமுக ஆட்சியின் மிகப்பெரிய பவர் சென்டராக இருக்கும் ஒருவரை அணுகி வீரமணி தப்பியிருக்கிறார். தற்போதும் வீரமணியை காப்பாற்றும் வேலையத்தான் திமுக செய்து வருகிறது.. வீரமணியை ஏன் கைது செய்யவில்லை? இதுதான் திமுகவின் ஸ்டைல்.. வழக்கு போடுவார்கள்... பேரம் பேசுவார்கள்.. கிடைக்கவேண்டியது கிடைத்தவுடன் அந்த வழக்கை கிடப்பில் போட்டு விடுவார்கள்.. ஆனால் நாங்கள் அப்படி அல்ல.. முதலமைச்சர் நேரடி கண்காணிப்பில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.. யாராவது இருந்தாலும் தப்ப முடியாது’ எனக்கூறியிருக்கிறார்.