செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வேதவல்லி
Last Modified: சனி, 11 ஜூன் 2016 (10:04 IST)

"கும்புடுறேன் சாமி" - வருத்தெடுத்த ராமதாஸ்

"கும்புடுறேன் சாமி" - வருத்தெடுத்த ராமதாஸ்

தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு, பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை குடும்பிடுவது குறித்து டிரைனிங் கொடுத்ததை கடும் விமர்சனம் செய்துள்ளார் ராமதாஸ்.


 

போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட, அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்டார். இதை முன்னிட்டு, கரூர் அருகே வெங்கமேட்டில் உள்ள அண்ணாதுரை, எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
 
இதில், சிலைகளுக்கு மாலை அணிவிப்பது குறித்தும், கட்சியினரை பார்த்து கும்பிடுவது, பொது மக்களை பார்த்து கும்பிடுவது போன்றவைகளை செய்வது குறித்த அறிவுரைகளை வழங்கினார் தம்பிதுரை. அவர் சொன்னது போலவே அமைச்சர் விஜயபாஸ்கர்  செய்து காட்டி, தம்பிதுரையிடம் பாராட்டு பெற்றார்.
 
இந்த சம்பவத்தை மையப்படுத்தி, இதற்கு தனியாக பயிற்சிக் கல்லூரி அமைத்து, கட்டணம் கூட நிர்ணயித்து விடலாம் என தனது டுவிட்டர் பக்கத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நக்கல் நையாண்டி செய்துள்ளார்.