வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 19 ஜனவரி 2024 (10:14 IST)

அயோத்தி ராமர் சிலைக்கு அபிஷேகம்.. ராமேஸ்வரத்தில் இருந்து புனிதநீர் எடுத்து செல்லும் பிரதமர் மோடி..

modii
தமிழக வரும் பிரதமர் மோடி இராமேஸ்வரத்தில் இருந்து புனித நீர் எடுத்துச்செல்ல இருப்பதாகவும், அந்த புனித நீர் அயோத்தி ராமர் சிலை அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா போட்டியை அவர் தொடங்கி வைக்கிறார்

அதன்பிறகு நாளை ஸ்ரீரங்கம் செல்லும் பிரதமர் மோடி ரங்கநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். இதனை அடுத்து அவர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று, புனித தீர்த்தங்களில் புனித நீராட உள்ளதாகவும் அதன் பின்னர் சுவாமி தரிசனம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பின்னர் தனுஷ்கோடி கோதண்டராமர் கோயிலிலும் அவர் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார்.  பிரதமர் மோடி கலசத்தில் புனித நீர் எடுத்துச் செல்ல இருப்பதாகவும் இந்த புனித திர்த்தங்களால் அயோத்தி ராமர் சிலைக்கு அபிஷேகம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Edited by Mahendran