மோசமான ஆட்சியால் முதல்வருக்கே சீட் இல்லை: புதுவையில் மோடி பிரச்சாரம்
மோசமான ஆட்சி காரணமாக முதல்வருக்கு காங்கிரஸ் கட்சியில் சீட் கிடைக்கவில்லை என புதுவையில் தேர்தல் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக இன்று காலை பிரதமர் மோடி வருகை தந்தார். அவருக்கு தமிழகத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது என்பதும் தாராபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் காங்கிரஸ் மற்றும் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது அவர் தமிழகத்தை அடுத்து புதுவைக்கு பிரச்சாரம் செய்ய சென்றுள்ளார். அங்கு அவர் தேர்தல் பிரசாரம் செய்தபோது புதுவையில் மோசமாக ஆட்சி செய்த முதல்வர் நாராயணசாமிக்கே அந்த கட்சி சீட் தரவில்லை என்றும் அதிலிருந்து அவருடைய ஆட்சியின் இலட்சணம் தெரிந்து இருக்கும் என்றும் கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
புதுவையில் முதல்வர் நாராயணசாமிக்கு இந்த முறை போட்டியிட சீட் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது