திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 30 மார்ச் 2021 (09:18 IST)

அலட்சியம் வேண்டாம்: புதுவை ஆளுனர் தமிழிசை அறிவுரை

தமிழகத்தைப் போலவே புதுவையிலும் நாளுக்கு நாள் கொரனோ வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முக கவசம் அணியாமல் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் அலட்சியத்துடன் இருக்க வேண்டாம் என புதுவை மக்களுக்கு அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்
 
புதுவையில் கடந்த சில நாட்களாக கொரனோ வைரஸ் பரவல் அதிகரித்து வருவதாகவும் புதுவையில் தான் பார்த்த வரையில் 50 சதவீதம் பேர் முகக்கவசம் அணிய வில்லை என்றும் புதுவை மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்
 
கடந்த இரண்டு வாரங்களாக புதுச்சேரியில் கொரனோ தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது என்றும் எனவே பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் அனைவரும் முக கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்
 
புதுவையில் ஏற்கனவே பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பதும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பு விரைவில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது