திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 12 மே 2023 (19:33 IST)

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவில் தூக்கில் தொங்கி தற்கொலை: விசாரணைக்கு மறுத்த பெற்றோர்..!

பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அந்த இறப்பில் சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணையை தொடங்க பெற்றோர்கள் மறுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் பிளஸ் டூ தேர்வில் சமீபத்தில் தேர்ச்சி பெற்ற நிலையில் திடீரென அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். 
 
அந்த மாணவிக்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் இருந்ததாகவும் ஆனால் சில நாட்களுக்கு முன்னர் அந்த இளைஞர் தான் அந்தமான் செல்வதாக தெரிவித்து சென்றதிலிருந்து மாணவி சோகமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் மாணவியின் இறப்பு சந்தேகத்திற்குரியதாக இருந்ததால் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என போலீசார் முடிவு செய்தனர். ஆனால் மாணவியின் உடலை பெற்றோர்கள் தர மறுத்து விட்டனர் என்பதும் மாணவியின் இறப்பில் தங்களுக்கு சந்தேகம் ஏதும் இல்லை என்று கூறி போலீஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva