+2 விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்றுடன் நிறைவு: ரிசல்ட் எப்போது?
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு தாள்கள் திருத்தும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றுடன் விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக ஒரு சில தேர்வு மையங்களுக்கு மட்டும் கூடுதலாக ஒரு நாள் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
தமிழகம் முழுவதும் +2பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி கடந்த ஒன்றாம் தேதி தொடங்கிய நிலையில் பல இடங்களில் விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்றுடன் முடிந்து விட்டது
இதனை அடுத்து பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் வரும் 23 ஆம் தேதி வெளிவர இருக்கும் நிலையில் இன்று பொறியியல் கலந்தாய்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது