செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 2 மார்ச் 2020 (13:55 IST)

புழல் சிறையில் பிளஸ் 2 தேர்வு எழுதும் கைதிகள்..

தமிழகத்தில் உள்ள மத்திய சிறைவாசிகள் புழல் சிறையில் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதினர்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வுகள் இன்று தொடங்கிய நிலையில், மத்திய சிறைச்சாலைகளில் இருந்து 62 சிறைவாசிகளும் தேர்வு எழுதுகிறார்கள். அதன் படி வேலூர், திருச்சி, கடலூர், பாளையங்கோட்டை, மதுரை ஆகிய சிறைகளிலிருந்து புழல் சிறையில் தேர்வு எழுதிகிறார்கள். இதற்காக புழல் சிறையில் தனி தேர்வு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் புழல் சிறையில் விசாரணை பிரிவில் 16 பேரும், தண்டனை பிரிவில் ஒருவரும் தேர்வு எழுதுகிறார்கள். புழல் சிறையிலிருந்து, வேலூர் சிறையிலிருந்து பெண் சிறைவாசிகள் தேர்வு எழுதுகிறார்கள். இவ்வாறு மொத்தம் 62 பேர் தேர்வு எழுதிகிறார்கள் என தெரியவருகிறது.