குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய விஜயகாந்த்... வைரலாகும் புகைப்படங்கள்

vijayakanth
Sinoj| Last Modified வியாழன், 14 ஜனவரி 2021 (16:15 IST)


தமிழ் சினிமாவில் தனது முயற்சியால் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக வலம் வந்து தமிழ் வசனங்களை மட்டுமே பேசி நடித்தவர் விஜய்காந்த்.இன்று அவர் உடல் நலக்குறைவால் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அவரது மவுஸு குறையவில்லை.

அவர் மற்றோருக்கு விளம்பரமில்லாமல் மனிதநேயத்துடன் செய்த உதவுகளும் ஒரு காரணம். சமீபத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரை அடக்கம் செய்யவிடாமல் தடுத்ததாகச் செய்தி வெளியானபோது தனக்குச் சொந்தமான நிலத்தில் பிணத்தை அடக்கம் செய்ய இடம் தருவதாகக் கூறினார்.

இந்நிலையில் விஜயகாந்த் அடுத்த தேர்தலில்பிரசாரம் செய்ய உடல் நிலை தேறி வருகிறார். தேமுதிக அதிமுக கூட்டணியில் உள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

இந்நிலையில் தமிழர் தினமான பொங்கலுக்கு வாழ்த்து என்றும் பொங்கல் திருநாளில் விவசாயிகளின் வாழ்வில் இன்னல் நீங்கி மகிழ்ச்சி மலர வேண்டும், மக்கள் மனதில் இருள்நீங்கி இன்பம் பொங்கிட வேண்டும எனத்
தெரிவித்துள்ளார் விஜயகாந்த்.

அதில், அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று கூறி தனது குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகை கொண்டாடும்
புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :