செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 7 ஏப்ரல் 2018 (13:10 IST)

பிட்காயினுக்கு தடை; டிஜிட்டல் கரன்சி: அடுத்த ப்ளானுடன் ரிசர்வ் வங்கி...

இந்தியாவில் பிடகாயின் தடை செய்யப்படுவதாக ரிசர்வ வங்கி அறிவித்துள்ளது. மேலும், டிஜிட்டல் கரன்சியை விரைவில் அறிமுகப்படுத்தும் திட்டத்திலும் ஈடுப்பட்டுள்ளதாம். 
கிரிப்டோ கரன்சிகளுள் ஒன்றான பிட்காயின் புழக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. பிட்காயின் பயன்படுத்தும் முறையில் பணம் யாரால் யாருக்கு கொடுக்கப்படுகிறது என்பது கண்டுபிடிக்க முடியாது. 
 
பிட்காயின் பயன்பாட்டால் நுகர்வோர் பாதுகாப்பு, சந்தை ஒருமைப்பாடு மற்றும் பண மோசடி ஆகியவை ஏற்படக்கூடும் என்ற காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 
மேலும், இது தொடர்பாக பயனர்கள் மற்றும் வர்த்தகர்களை எச்சரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற கிரப்டோ கரன்சி வைத்திருப்பவர்கள், மூன்று மாதத்திற்குள் பணமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 
 
பிட்காயின் தடையோடு சேர்த்து, ரிசர்வ் வங்கிக்கென ஒரு டிஜிட்டல் கரன்சியை உருவாக்குவதற்கான செயல்முறையில் ஈடுப்பட்டுள்ளதாகவும், ஜூன் மாதம் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.