வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: புதன், 4 ஏப்ரல் 2018 (17:30 IST)

தெலுங்குப் படங்களுக்குத் தமிழ்நாட்டில் தடை

தெலுங்குப் படங்களும் தமிழ்நாட்டில் ரிலீஸாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
அதிக டிஜிட்டல் கட்டணத்தை எதிர்த்து கடந்த மார்ச் 1ஆம் தேதியில் இருந்து புதுப்படங்களை ரிலீஸ் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது தயாரிப்பாளர்கள் சங்கம். 16ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் நடந்த படப்பிடிப்புகளும், 23ஆம் தேதி முதல் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் நடந்த படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், போஸ்ட் புரொடக்‌ஷன், விழாக்கள் என சினிமா சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளுமே நிறுத்தப்பட்டுள்ளதால், தமிழ் சினிமாவே முடங்கியுள்ளது.
 
ஆனால், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிறமொழிப் படங்கள் வழக்கம் போல் தமிழ்நாட்டில் ரிலீஸாகி வருகின்றன. மக்களும் அந்தப் படங்களைப் பார்க்க தியேட்டருக்குச் செல்கின்றனர். இதற்கு எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, வருகிற ஞாயிற்றுக்கிழமையில் இருந்து தெலுங்குப் படங்களும் தமிழ்நாட்டில் ரிலீஸாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.