செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (13:36 IST)

தமிழகம் முழுவதும் இன்று மருந்து கடைகள் அடைப்பு

ஆன்லைன் மருந்து விற்பனையை எதிர்த்து இன்று தமிழகம் முழுவதும் உள்ள மருந்துகடைகள் அடைக்கப்படுவதாக மருந்து வணிகர்கள் சங்கம் அறிவிப்பு

இந்தியாவில் ஆன்லைனில் மருந்து விற்பனையை அனுமதிக்கும் திட்டத்தின் அறிக்கை இந்தாண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. இதற்கு மருந்து கடைகள் சார்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக கடையடைப்பு நடத்திப் போராட்டமும் நடத்தினர்.

’இந்தியாவில் மொத்தம் ஏழரை லட்சத்துக்கும் மேற்பட்ட மருந்து கடைகள் மருந்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. இத்தொழிலை நம்பி கிட்டத்தட்ட 40 லட்சம் பேர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆன்லைன் வணிகத்தை அனுமதித்தால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகும்.’ என மருந்து வணிகர்களின் சங்கம் அறிவுறுத்தியது

மேலும் அச்சங்கத்தின் தலைவர் கே கே செல்வன் ‘மருத்துவர்களின் பரிந்துரையில் படி மட்டுமே மருந்துகள் விற்கப்பட வேண்டும், ஆன்லைன் விற்பனை பொதுமக்களுக்கு அபாயகரமானது. ஆனலைன் வர்த்தகத்தின் ஆதிக்கத்தால் கிராம மற்றும் சிறு நகரங்களில் உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பதில் சிரமம் ஏற்படும்’. என அறுவுறுத்தினார்.

மேலும் இவ்விஷயத்தில் இரண்டாவது முறையாக இன்று மீண்டும் தமிழகம் முழுவதும் கடையடைப்பு அறிவிக்கப்பட்டு 30 ஆயிரம் மருந்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. மேலும் அச்சங்கத்தினர் இன்று சென்னை சேப்பாக்கத்தில் இன்று ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.