1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (15:07 IST)

ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்களுக்கு விடுமுறை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மே 14 முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் பெட்ரோல் நிலையங்கள் இயங்காது என விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


 

 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பெட்ரோல் நிலையங்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் இயங்காது என விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய பெட்ரோல் கூட்டமைப்பின் அழைப்பை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இது வருகிற மே மாதம் 14ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளனர்.
 
ஏற்கனவே இந்த செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இந்தியாவில் இனி பெட்ரோல் விலை தங்கம் விலை போல் தினசரி மாற்றப்பட்டு அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியானது. இதை முதல் கட்டமாக ஐந்து நகரங்களில் செயல்படுத்த உள்ளனர்.
 
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள சுமார் 4,800 பெட்ரோல் நிலையங்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் இயங்காது என அறிவித்துள்ளனர். மேலும் மே 15ஆம் தேதி முதல் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே பெட்ரோல் நிலையங்கள் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.