ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 25 மே 2021 (08:22 IST)

இன்றும் விலை ஏறியது பெட்ரோல் டீசல்: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது பெட்ரோல் இன்று 20 காசுகளும் டீசல் விலை 24 காசுகளும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். இன்று சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம். 
 
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 20 காசுகள் உயர்ந்துள்ளதால் இன்றைய ஒரு லிட்டர் விலை ரூ.95.06 ஆக விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் இன்று பெட்ரோல் விலை 24 காசுகள் உயர்ந்துள்ளதால் இன்றைய ஒரு லிட்டர் விலை ரூ.89.11 ஆக விற்பனையாகி வருகிறது
 
முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைத்து மக்களின் சுமையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வரும் நிலையில் முதல்வர் அந்த கோரிக்கையை ஏற்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்