1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 21 மே 2021 (07:33 IST)

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: சென்னையில் இன்றைய விலை என்ன?

ஐந்து மாநில தேர்தலுக்கு பின்னர் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து கொண்டே வந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசியல் கட்சி தலைவர்களும் பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர் 
 
இந்த நிலையில் நேற்றும் நேற்று முன்தினமும் பெட்ரோல் விலை ஒரே விலையாக இருந்த நிலையில் இன்று பெட்ரோல் விலை சற்று குறைந்துள்ளது பொதுமக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்த தகவலை பார்ப்போம்
 
சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்த தகவல் இதோ
 
சென்னையில் பெட்ரோல் விலை 23 காசுகள் குறைந்து ரூ.94.31 என்ற விலையில் விற்பனை ஆகிறது. 
 
சென்னையில் இன்று டீசலின் விலை 24 காசுகள் குறைந்து 88.07 என்ற விலையில் விற்பனை ஆகிறது