1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 16 மே 2021 (07:15 IST)

இன்று மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை: ரூ.95ஐ நெருங்கியது பெட்ரோல்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது என்பதை பார்த்து வருகிறோம். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டுவருவதே பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணம் என மத்திய அரசு கூறிக் கொண்டிருந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீது விதிக்கப்படும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரியே இந்த அளவுக்கு பெட்ரோல் விலை உயர காரணம் என அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது பொதுமக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்
 
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 0.22 காசுகள் அதிகரித்து லிட்டர் ஒன்றுக்கு ரூ.94.31 என விற்பனையாகிறது.
 
சென்னையில் இன்று டீசல் விலை 0.26 காசுகள் அதிகரித்து லிட்டர் ஒன்றுக்கு ரூ.88.07 என விற்பனையாகிறது.