திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 19 மே 2021 (09:01 IST)

கங்கை நதியில் மிதந்த சடலங்கள்… பெட்ரோல் ஊற்றி எரித்த காவலர்கள் சஸ்பெண்ட்!

கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களை எரிக்க முடியாமல் கங்கை ஆற்றில் தள்ளிவிடுவது அதிகமாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களை அவர்களது உறவினர்களே பிணங்களை கங்கை நதியில் தூக்கி வீசி எறியும் சம்பவங்கள் உத்தரப்பிரதேசம் பீகார் மாநிலத்தில் அதிகம் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் கங்கை நதியில் நூற்றுக்கணக்கான பிணங்கள் மிதந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு இதுகுறித்து உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் அரசு இதற்காக எச்சரிக்கை விடுத்தன.

உத்தரப்பிரதேசம் மாநிலம் பல்லியா அருகே மால்தேபூர் இதே போல மிதந்து வந்த உடல்களைக் கைப்பற்றிய காவல்துறையினர் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இது சம்மந்தமான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் அந்த 5 காவலர்களும் இப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.