தொடர்புடைய செய்திகள்
- மழையால் வரத்து குறைவு; எகிறிய தக்காளி விலை! – மக்கள் அதிர்ச்சி!
- பெட்ரோல் 26 காசுகள், டீசல் 33 காசுகள் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்!
- ஜோடியாக உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி: விலை விவரம் உள்ளே!
- தமிழகத்தில் கட்டுமான பொருட்கள் விலை தாறுமாறாக உயர்வு!
- புரட்டாசியோடு சேர்ந்த தசரா... குறைந்தது முட்டை விலை!
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு!
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்: சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்துள்ளது. இதனை அடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.79 என விற்பனையாகி வருகிறது.
அதேபோல் சென்னையில் டீசல் லிட்டர் ஒன்றுக்கு 33 காசுகள் உயர்ந்துள்ளது. இதனை அடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.97.59 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது,
இன்று டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 104.44 ரூபாய் எனவும், மும்பையில் ஒரு லிட்ட்ர் பெட்ரோல் விலை 110.41 எனவும் விற்பனையாகிறது. அதேபோல் டெல்லியில் டீசல் லிட்டர் ஒன்றுக்கு 93.17 ரூபாய்க்கும் மும்பையில் ஒரு லிட்ட்ர் டீசல் விலை 101.03 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
