வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 7 ஜூலை 2021 (12:47 IST)

தலைவர் ரிட்டர்ன்: அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பும் ரஜினிகாந்த்!

கொரோனா தடுப்பு ஊசி செலுத்திக் கொண்ட ரஜினிகாந்த் மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று உடல் பரிசோதனைக்காக தனி விமானம் மூலம் கடந்த 19ம் தேதி காலை அமெரிக்கா சென்றார். மருத்துவ பரிசோதனை முடிந்து மூன்று வார காலம் அமெரிக்காவில் தங்கிய பின்பு சென்னை திரும்புவார் என கூறப்பட்டது.
 
அமெரிக்காவில் உள்ள மையோ கிளினிக் என்ற மருத்துவமனையில் உடல் பரிசோதனை முடிந்த நிலையில் நாளை அதிகாலை சென்னை திரும்புவதாக சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளது. அவருடன் சென்ற மனைவி லதா மற்றும் ஏற்கனவே அமெரிக்காவில் உள்ள மகள் ஐஸ்வர்யா மற்றும் பேரன்கள் என குடும்பமாக நாளை சென்னை திரும்புவார்கள் என செய்திகள் கூறுகிறது. தலைவர் சிகிச்சை முடிந்து நாடு திரும்புவதை அறிந்து அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.