1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 21 மே 2023 (08:09 IST)

365 நாட்கள்.. சரியாக ஒரு ஆண்டாக மாறாத பெட்ரோல், டீசல் விலை..!

கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சரியாக 365 நாட்கள் அதாவது ஒரு வருடமாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்ற தகவல் பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. 
 
இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் இலங்கை போன்ற நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை விண்ணைத் தொட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இன்றி உலகம் முழுவதும் பல நாடுகளில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இருந்தது. ஆனால் இந்தியாவில் கடந்த ஒரு ஆண்டாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ரஷ்யாவில் இருந்து சலுகை விலையில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்துள்ளதால் தான் விலையில் மாற்றம் இன்றி பொதுமக்களுக்கு பெட்ரோல் டீசல் விலை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால் அதே நேரத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது எண்ணெய் நிறுவனங்கள் விலையை குறைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது மொத்தத்தில் சமையல் சிலிண்டர் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மட்டும் ஒரே விலையில் இருப்பது போது மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தும்.
 
Edited by Siva