1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Gold and silver rate at chennai today

சென்னையில் இன்று தங்கம், வெள்ளி விலை திடீர் உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

தங்கம்
கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து கொண்டே வந்த நிலையில் இன்று திடீரென தங்கம் ஒரு கிராமுக்கு 55 ரூபாயும் ஒரு சவரனுக்கு 440 ரூபாயும் உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 45 ரூபாய் உயர்ந்து 5680 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை சென்னையில் இன்று 45,440 என விற்பனை ஆகி வருகிறது.
 
 24 கேரட் சுத்த தங்கம் சென்னையில் இன்று ஒரு கிராம் 6147 என்றும் ஒரு சவரன் 49176 என்றும் விற்பனை ஆகி வருகிறது. தங்கம் போலவே இன்று வெள்ளியின் விலை சென்னையில் உயர்ந்துள்ளது. 
 
நேற்று ஒரு கிராம் 78 ரூபாய் என்று விற்பனையாகி வந்த வெள்ளியின் விலை இன்று ஒரு ரூபாய் உயர்ந்து 79 என விற்பனை ஆகி வருகிறது. அதேபோல் ஒரு கிலோ ஆயிரம் ரூபாய் 79 ஆயிரம் என விற்பனையாகி வருகிறது 
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
பாலிடெக்னிக் படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்வது எப்போது? முக்கிய அறிவிப்பு..!