வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 8 அக்டோபர் 2022 (08:26 IST)

140 நாட்களாக மாற்றமில்லா பெட்ரோல், டீசல் விலை.. இனிமேல் மாற்றம் இருக்குமா?

petrol
சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த 140 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை. இந்த நிலையில் இனிமேல் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
ஒபெக் பிளஸ் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும் என்றும் அதனால் பெட்ரோல்-டீசல் விலை உயரும் என்றும் கூறப்படுகிறது
 
ஆனால் அதே நேரத்தில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இன்னும் பல மாதங்களுக்கு தேவையான கச்சா எண்ணெய்யை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டிருப்பதால் ஒபெக் பிளஸ் நாடுகளின் உற்பத்தி குறைப்பு இந்தியாவை பாதிக்காது என்று கூறப்படுகிறது
 
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 என்றும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 என்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran