புதன், 8 பிப்ரவரி 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated: புதன், 21 செப்டம்பர் 2022 (07:40 IST)

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?

Petrol
சென்னையில் கடந்த நான்கு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டிய நிலையில் இந்தியாவில் கடந்த நான்கு மாதங்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பது இந்திய மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 மேலும் பெட்ரோல் டீசல் மீதான வரிகளை குறைக்க வேண்டும் என்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் வீழ்ச்சிக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.