1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Petrol and Diesel rate at Chennai today

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

Petrol
சென்னையில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம்.  அந்த வகையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது 
 
இந்தியாவின் அண்டை நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டி உள்ள நிலையில் இந்தியாவின் எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே அதிக அளவில் கச்சா எண்ணெய்யை கையிருப்பு வைத்துள்ளதால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
61.18 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!