1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (17:33 IST)

பெட்ரோல் நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு இல்லை!

பெட்ரோல் நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு இல்லை என இந்தியன் ஆயில் டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் விலை கடந்த 100 நாட்களுக்கும் மேலாக உயராமல் இருப்பது வாகன ஓட்டிகள் பெரும் நிம்மதியை அளித்தாலும், திடீரென சென்னையில் பல்வேறு பகுதிகளில் டீசல் தட்டுப்பாடு என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் டீசல் இல்லை என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இது தற்காலிகமானது என்றும் விரைவில் சென்னையில் டீசல் தட்டுப்பாடு இருக்காது என்றும் பெட்ரோல் நிலைய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு இல்லை என இந்தியன் ஆயில் டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் நிலையங்களுக்கு தேவையான டீசல் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் டீலர்கள் சங்கம் கூறியுள்ளது.