1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 7 செப்டம்பர் 2022 (07:18 IST)

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வா?

petrol
சென்னையில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
இதனையடுத்து இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சரிந்து வந்தாலும் இந்தியாவின் அண்டை நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உச்சத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆனால் மூன்று மாதங்களுக்கும் மேலாக சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது பொதுமக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடப்பட்டது