1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

65வது நாளாக மாறாத பெட்ரோல், டீசல் விலை!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த அறுபத்தி நான்கு நாட்களாக மாறாத நிலையில் இன்று 65 ஆவது நாளாகவும் மாறவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை தேர்தல் முடியும் வரை மாறாது என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. 
 
அந்தவகையில் கடந்த அறுபத்தி நான்கு நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை விற்பனையான நிலையிலேயே இன்றும் விற்பனையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 என்றும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 என்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆனால் அதே நேரத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.