1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 8 ஜனவரி 2022 (09:48 IST)

இன்றைய பெட்ரோல், டீசல் விலை விபரம்! (08-01-2022)

இன்றைய பெட்ரோல், டீசல் விலை விபரம்! (08-01-2022)
கடந்த இரண்டு மாதங்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதும் ஒரே விலையில் நீடித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 

 
இந்நிலையில் 65வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இருப்பினும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்ததற்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 101.40 எனவும் சென்னையில் இன்று டீசல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.