1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Petrol and Diesel rate at chennai

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னை
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் சென்னை உள்பட இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை ஒரே விலையாக விற்பனையாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
குறிப்பாக சென்னையில் கடந்த நான்கு மாதங்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தேவையான அளவு கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்து வைத்துள்ள நிலையில் இன்னும் சில மாதங்களுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
சென்னையில் அதிகாலை முதல் கனமழை: 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என தகவல்!