செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 27 அக்டோபர் 2021 (07:52 IST)

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு

சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது என்பதும் நேற்றும் நேற்று முன்தினமும் பெட்ரோல் விலை உயராமல் இருந்து பொதுமக்களை சற்று நிம்மதி அடையச் செய்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
இன்று பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்ததை அடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.104.83 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் டீசல் விலை ஒரு லிட்டர் 33 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100.92 என விற்பனையாகி வருகிறது என்பது குறிபிடத்தக்கது
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலை 105 மற்றும் 101 என்ற விலைக்கு சென்றுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது