1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 20 மே 2025 (11:30 IST)

தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா!? இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு!

கடந்த 2020ம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தற்போது சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவி வரும் இந்த கொரோனா பிற நாடுகளிலும் அதிகம் பரவலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வரும் விமானப் பயணிகள் பரிசோதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர்.

 

இந்தியாவிலும் கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை அன்று 93 ஆக இருந்த கொரோனா பாதிப்பு நேற்று 257 ஆக உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் 66 பேருக்கு கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் கொரோனா பாதிப்புகள் தற்போது கட்டுப்பாட்டிற்குள் உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

மேலும் அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்பு சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

 

Edit by Prasanth.K