1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 8 ஏப்ரல் 2024 (13:05 IST)

ஓபிஎஸ் சுயேட்சையாக போட்டியிடுவது வருத்தமாக உள்ளது: பீட்டர் அல்போன்ஸ்

முதல்வராக இருந்தவர், அதிமுகவின் இரண்டாவது இடத்தில் இருந்தவர் என்ற பெருமை பெற்ற ஓ பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிடும் நிலையை கண்டு எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று காங்கிரஸ் பிரமுகர் பீட்டர் அல்போன்ஸ் பேசி உள்ளார்.
 
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் இன்று ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார் 
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது ஓ பன்னீர்செல்வம் எனது நெருங்கிய நண்பர், ஆனால் அவரது நிலையை கண்டு எனக்கு வருத்தமாக உள்ளது,

ஒரு காலத்தில் முதல்வராக இருந்தவர், அதிமுகவில் இரண்டாவது இடத்தில் இருந்தவர், தற்போது ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் நிலையை நினைத்து உண்மையிலேயே நான் வருந்துகிறேன் 
 
ஆனால் அதே நேரம் அவர் பாஜக ஆதரவு நிலைப்பாடு எடுத்துக் கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ராமநாதபுரம் தொகுதியை பொருத்தவரை திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி வெற்றி பிரகாசமாக இருப்பதாகவும் அவரை ஆதரித்து பிரசாரம் செய்து வருவதாகவும் பேட்டியில் கூறினார். 
 
 
Edited by Mahendran