வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: சனி, 30 மே 2020 (23:00 IST)

ரங்கநாதன் தெருவில் மீண்டும் கடைகள் திறக்க அனுமதி – சென்னை மாநகராட்சி

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை கூறியுள்ளதாவது : இன்று தமிழகத்தில் மேலும் 938 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,184 ஆக அதிகரித்துள்ளது. இன்று 6 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம்  பலியானோர் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 618 பேருக்கு கொரோனா தொற்று  உறுதியாகியுள்ளது என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை ரங்கநாதன் தெருவில் செயல்படும் கடைகளால் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததாலும் சமூக இடைவெளி இல்லாததாலும் அனைத்துக் கடைகளையும் திறக்க நேற்று மாநகராட்சி உத்தரவிட்டது.

இதனையடுத்து, வியாபாரிகள் சங்கத்தினர் சார்பில் மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்ததாகத் தெரிகிறது. அரசு வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும்  முறையாக பின்பற்றப்படும் வியாபாரிகள் உறுதியளித்தனர். எனவே கடைகள் திறக்க சென்னை மாநகராட்சி அனுமதியளித்துள்ளது.