வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: புதன், 20 மே 2020 (15:07 IST)

ஆட்டோக்களை இயக்க அனுமதி அளிக்க வேண்டும் – டிடிவி.தினகரன் டுவீட்

சீனாவில் இருந்து உலகம் முழுவதும்  பரவியுள்ள கொரொனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன, 3 லட்சம் மக்கள் கொரோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்தியாவில் மூன்றாவது கட்டமாக ஊரடங்கு வரும் மே 17 ஆம் தேதி வரை  அமல்படுத்தப்பட்டது.  அதன் பிறகு 4ஆம் கட்ட பொது ஊரடங்கு வரும் மே 31 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு  உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில் அதிக பாதிப்புகள் இல்லாத பகுதிகளில் மட்டும் பேருந்துகள் இயக்க அரசு அனுமதியளித்துள்ளது.

பொதூஊடங்கு முடக்கத்தால்  அரசிடம் இருந்து உதவிகள் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஆட்டுநர்களுக்கு  உதவி செய்யும் வண்ணம் நிபந்தனைகளுடன் ஆட்டோக்களை இயக்க அனுமதி அளிக்க வேண்டுமென அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் டுவீட் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

அரசிடமிருந்து சிறப்பு உதவிகள் எதுவும் கிடைக்காமல் பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஆட்டோ ஓட்டுனர்கள் இதன் மூலம் ஓரளவுக்கு நிம்மதி பெருமூச்சு விட முடியும். எனவே, தமிழக அரசு உடனடியாக இதனைப் பரிசீலித்து அறிவிக்கவேண்டும்

கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நிபந்தனைகளுடன் ஆட்டோக்களை இயக்குவதற்கும் தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்.