திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 30 செப்டம்பர் 2021 (07:52 IST)

டீக்கடையில் உட்கார்ந்து ஆட்டோ ஓட்டுனர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி!

டீக்கடையில் உட்கார்ந்து ஆட்டோ ஓட்டுனர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி!
காங்கிரஸ் முன்னாள் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி ஏழை எளிய மக்களிடம் மிக எளிதில் பழகுவார் என்பதும் அவர் சர்வசாதாரணமாக பொதுமக்களிடம் கலந்துரையாடல் செய்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.
 
அந்த வகையில் சமீபத்தில் அவர் கேரள மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செய்தார். அப்போது பொதுமக்களிடம் அவர் நெருங்கி பழகி அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கேரள மாநிலத்தில் மலப்புரம் எந்த பகுதியில் அவர் சென்று கொண்டிருந்த போது அங்கு ஆட்டோ ஓட்டுனர்கள் இருப்பதைப் பார்த்தார். இதனை அடுத்து அவர்களுடன் அவர் ஹோட்டலுக்கு சென்று ஓட்டலில் உட்கார்ந்து ஆட்டோ ஓட்டுநர்கள் இடம் பேசினார். 
பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை ஆட்டோ ஓட்டுனர்கள் ராகுல் காந்தியுடன் தெரிவித்தனர். அவர்களுடன் கலந்துரையாடிய ராகுல்காந்தி பெட்ரோல் டீசல் விலையை குறைப்பது அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க மத்திய அரசை வலியுறுத்தப்படும் என்றும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை குறையும் என்று நம்பிக்கை அளித்தார் . ஆட்டோ ஓட்டுநர்கள் இடம் ராகுல் காந்தி பேசிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.