கேரளாவில் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா: இன்றைய நிலவரம்!
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன் வரை 30 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு இருந்து வந்ததை அடுத்து தற்போது அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,196 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 18,849 என்றும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 149 என்றும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது
மேலும் இன்று பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 96,436 என்றும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை எண்ணிக்கை 1,49,356 என்றும் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 24,810 என்றும் கேரள மாநில அரசு அறிவித்துள்ளது