வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 25 ஜூன் 2021 (21:20 IST)

23 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி-தமிழக அரசு

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் 23 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், இராமநாதபுரம், புதுக்கோட்டை, இராணிப்பேட்டை,  தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பூர்,  சிவகங்கை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, வேலூர், விருதுநகர், , விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் பேருந்து இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் அனுமதிக்கப்பட்ட் நிலையில் தற்போது 23 மாவட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படுள்ளது . இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.