வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 10 அக்டோபர் 2023 (15:24 IST)

எடப்பாடி பழனிசாமி பெயரை பயன்படுத்த நிரந்தர தடை! – கனகராஜ் சகோதரருக்கு நீதிமன்றம் உத்தரவு!

கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமி பெயரை பயன்படுத்த கனகராஜ் சகோதரருக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.



கோடநாட்டில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் நடந்த கொலை கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர் டிரைவர் கனகராஜ். ஒரு கார் விபத்தில் கனகராஜ் உயிரிழந்து விட்ட நிலையில் கோடநாடு கொலை வழக்கு மர்மமாகவே நீடித்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் கனகராஜின் சகோதரர் தனபால், கோடநாடு கொலை வழக்கு சம்பவத்தில் அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு உள்ளதாக பேசி வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனபாலின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

இதை விசாரித்து வந்த சென்னை உயர் நீதிமன்றம் தனபாலிடம் போதிய ஆதாரங்கள் இல்லாத நிலையில் அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமியை இந்த வழக்கில் தொடர்புபடுத்தி பேச நிரந்தர தடை விதித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை மாஸ்டர் நீதிமன்றத்தில் பதிவு செய்வதற்காக விசாரணையை நவம்பர் 6-ம் தேதி ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Edit by Prasanth.K