திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 7 செப்டம்பர் 2017 (13:20 IST)

பெரியார், அம்பேத்கர் கொள்கைகள் ஏற்கத்தக்கது அல்ல: கிருஷ்ணசாமி அதிரடி!

பெரியார், அம்பேத்கர் கொள்கைகள் ஏற்கத்தக்கது அல்ல: கிருஷ்ணசாமி அதிரடி!

அனிதா தற்கொலை குறித்து சர்ச்சைக்குறிய கருத்துக்களை கூறி வரும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தற்போது பெரியார், அம்பேத்கர் கொள்கைகள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியுள்ளார்.


 
 
நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத விரக்தியில் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வு அவரது தற்கொலைக்கு காரணமில்லை. வேறு காரணங்களுக்காக அனிதா தற்கொலை செய்திருக்கலாம். இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கூறிய கிருஷ்ணசாமி டெல்லியில் அளித்த பேட்டியில் மேலும் சில கருத்துக்களை கூறியுள்ளார்.
 
அந்த பேட்டியில் அரியலூர் மாணவி அனிதா மூளை சலவை செய்யப்பட்டுதான் தற்கொலை செய்துள்ளார். இது தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. சிபிஐ அல்லது விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டால் இந்த ஆதாரங்களை சமர்ப்பிக்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
தனது மகளுக்கு மெடிக்கல் சீட் கிடைத்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்தினால் அந்த சந்திக்க தயாராக உள்ளேன். தர்மபுரி இளவரசன், டிஎஸ்பி விஷ்ணுபிரியா ஆகியோரது மரணத்தில் சந்தேகம் உள்ளது போல அனிதாவின் தற்கொலையிலும் சந்தேகம் உள்ளதாக கூறிய கிருஷ்ணசாமி இந்த காலத்துக்கு தந்தை பெரியார், அம்பேத்கர் கொள்கைகள் ஏற்கத்தக்கது அல்ல என கூறினார்.