புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 7 டிசம்பர் 2020 (10:34 IST)

பரோல் முடிந்து மீண்டும் சிறை செல்லும் பேரறிவாளன் – தமிழக மக்கள் அதிருப்தி!

ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் முடிந்து இன்று மீண்டும் சிறைக்கு செல்ல உள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழு தமிழர்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை தீர்மானம் இயற்றியும் இன்னும் அவர்கள் விடுதலையாகவில்லை. இந்த நிலையில் சிறையில் இருக்கு எழுவரில் பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு அவ்வப்போது பரோல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 45 நாள் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்நிலையில் சிறுநீர் தொற்றுக்காக சிகிச்சைப் பெற்று வரும் பேரறுவாளனை நிரந்தரமாக விடுதலை செய்யவேண்டும் என அவரின் தாயார் அற்புதம் அம்மாள் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் தமிழக எதிர்க்கட்சிகளும் இது சம்மந்தமாக கோரிக்கைகளை தொடர்ந்து வைத்து வருகின்றன.

இதையடுத்து பரோல் இருமுறை நீட்டிக்கப்பட்டதை அடுத்து இன்று பரோல் முடிந்து பேரறிவாளன் மீண்டும் சிறைக்கு செல்கிறார். பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்ற குரல்கள் தமிழகம் முழுவதும் எழுந்துள்ள நிலையில் அவர் மீண்டும் சிறைக்கு செல்வது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.